English සිංහල
இப்போது விசாரிக்கவும்

சுற்றாடல் நண்பர்கள்


 

சினேகபூர்வமான சுற்றாடல்சார் தொழில்முயற்சி திட்டங்களை தாபிப்பதற்கான சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கான கடன் திட்டமாகும்.

தகுதிவாய்ந்த தொழில்முயற்சி அமைப்புக்கள்


 

செயற்திட்டம் முடிவடையும் போது நிலையான சொத்துக்களின் முதலீட்டின் அளவு காணியும் கட்டிடமும் (சொந்தமானது அல்லது வாடைகக்கு பெறப்பட்டது) தவிர்த்து மூலப் புத்தகப் பெறுமதியானது ரூபா. 250 மில்லியனை விஞ்சாத தொகையில் காணப்படும் ஏதேனும் உற்பத்தி அல்லது தொழிற்துறை நிறுவனசார் அமைப்புக்கள்,

சுற்றாடல் நண்பர்கள் II கடன் திட்டமானது உற்பத்தி முயற்சிகள், கழிவகற்றல் முறைமைகள், சக்தி நுகர்வு, வளங்களின் மீட்பு மற்றும் சேமிப்பு, மாசுக் கட்டுப்பாடு மற்றும் இழிவளவாக்கல் அளவிடைகள் போன்றவற்றின் காரணமாக ஏற்படும் கைத்தொழிற் துறை மாசடைதலினால் தோற்றுவிக்கப்படும் எதிர்மறை விளைவுகள் குறைப்பதற்காக சினேகபூர்வமான சுற்றாடல்சார் தொழில்முயற்சி வணிகத் தீர்வுகளை நாடுவோருக்கு அல்லது அவர்கள் தொழிற்படும் சூழலை முன்னேற்றுவதற்கான வேறு ஏதேனும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு ஏதேனும் குறைந்த கிரயத்தில் கடங்களை வழங்குகின்றது.

பொதுவான கடன் திட்டம்
அதிகபட்ச கடன் தொகை ரூபா.30மில்லியன்
வருட வட்டி வீதம் 6.5%
மீளச் செலுத்தும் காலம் (2 வருட சலுகை காலம் உள்ளடங்கலாக) 10 வருடங்கள்
தொழினுட்ப மாற்றீட்டு உதவி கடன் திட்டம் (சூழல்சாட் பிரச்சினைகளை கண்டறிவதற்கான ஆலோசனை சேவையினை பெற்றுக்கொள்வதற்கு)
அதிகபட்ச கடன் தொகை Rs. 1.0 மில்லியன்
வருட வட்டி வீதம் 2%
மீளச் செலுத்தும் காலம் (2 வருட சலுகை காலம் உள்ளடங்கலாக) 05 வருடங்கள்